தமிழகம்
முத்துப்பேட்டை அருகே சிறப்பு குறைதீர்க்கும் முகாம்..

முத்துப்பேட்டை, தெற்கு நாணலூர் கிராமத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் வட்ட வழங்க அலுவலர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் மாற்றம், உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 18 மனுக்களை வழங்கினர். 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டது.