தமிழகம்
திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்..

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் சுமார் மூன்றரை கோடி ரூபாயில் கட்டப்பட்ட மாணவிகள் விடுதியை முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், எம் பி செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விடுதியை பார்வையிட்டனர்.