தமிழகம்
பட்டுக்கோட்டை தலைமை ஆசிரியருக்கு அரசு விருது..

பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி. மஞ்சுளா அவர்களுக்கு கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கூட்டமைப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு உள்ளிட்ட அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசு அண்ணா தலைமைத்துவ விருது வழங்கி கௌரவித்துள்ளது. விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பட்டுக்கோட்டை நகர மன்ற தலைவர் மற்றும் திமுக நகரச் செயலாளர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.