தமிழகம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

 நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வை 4.25 லட்சம் பேர் எழுதினர். குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தகுதி பெற்ற தேர்வர்கள் பிப்ரவரி 2 மாலை முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) தகுதிப் பெற்றிருக்க வேண்டும்.

இத்தேர்வு அந்தந்த மாநிலங்களில் மூலம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. 2 தாள்கள் கொண்டு இத்தேர்வு நடத்தப்படும். முதல் தாள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை இரண்டாம் தாளும் நடத்தப்படுகிறது. டெட் 2025 தேர்வு முடிவுகளை www.trb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button