தமிழகம்
உலகக்கோப்பை ஸ்குவாஷ்: 3 தமிழக வீரர்கள் பங்கேற்பு..

சென்னையில் இன்று முதல் டிசம்பர் 14 வரை ஐந்தாவது உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இதற்கான கோப்பையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இந்தியா, ஜப்பான், மலேசியா, எகிப்து உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணியில் அனாஹத் சிங், தமிழகத்தை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.




