
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததாக அறிவிப்பு. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்… 2016-ம் ஆண்டே அமைய வேண்டிய கூட்டணி சற்று தாமதமாக அமைந்திருக்கிறது, செயலாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

2005ம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து தனித்து போட்டி, அதிமுக கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி என்று தேர்தல்களை சந்தித்த தேமுதிக முதல்முறையாக திமுக கூட்டணியில் இணைந்ததுகட்சியின் 20 ஆண்டுகால வரலாற்றில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைப்பது இதுவே முதல் முறை




