தமிழகம்

மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க ரூ.1,000 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு..

 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க ரூ.1,000 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் அதனை தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் மாநில முழுவதும் பரவலான பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன. தற்காலிக நடவடிக்கையாக உள்ளாட்சி நிர்வாகங்கள் கல். மண், ஜல்லிகளை கொட்டி சாலைகளை சீரமைத்தன. ஆனால் தற்காலிக சீரமைப்புகள் நீடித்த பயன்பாட்டுக்கு ஏற்றதாக இல்லை. இதனால் மழையால் சேதம் அடைந்த சாலைகளை முன்னுரிமை அடிப்படையில் முழுமையாக சீரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button