தமிழகம்
ரோடு ஷோ நடத்த யாருக்கும் அனுமதி இல்லை: தமிழ்நாடு அரசு..

விஜய் கூட்டங்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் வழிகாட்டுதல் விதிகளை வகுக்கும் வரை யாருக்கும் ரோடு நடத்த அனுமதி இல்லை என ஹை கோர்ட்டில் அரசு தெரிவித்துள்ளது. உடனே தலைமை நீதிபதி இது அரசியல் கட்சிகளின் உரிமையை பறிப்பது ஆகாதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ரோடு ஷோக்கு மட்டுமே அனுமதியில்லை. பொதுக்கூட்டங்கள் நடத்த எந்த தடையும் இல்லை என அரசு விளக்கமளித்தது.




