தமிழகம்
விஜய் குறித்து நீதிபதி சொன்ன வார்த்தை..

கரூர் துயர வழக்கில் முதலமைச்சர், இபிஎஸ் வந்தால் கட்சியினர் மட்டுமே பார்க்க வருவார்கள். ஆனால் டாப் ஸ்டார் ஆன விஜய் வந்தால் குடும்பத்துடன் பெண்கள் வருவார்கள் என தெரியாதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். விஜய் பரப்புரை என்றால் மாநாடு போல தான் பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள் எனும்போது பத்தாயிரம் பேர் என கணித்ததே தவறு. கூட்டம் அளவு கடந்து சென்றது தெரிந்தும் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.