தமிழகம்
மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்திற்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிப்பு..

மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்திற்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. சமூக நல அமைச்சரை தலைவராக கொண்ட மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்திற்கு 21 அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நலவாரியத்தில் ஏற்கனவே அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 233 பேர் விண்ணப்பித்த நிலையில் தகுதிவாய்ந்த 21 பேர் உறுப்பினர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.




