தமிழகம்

கண்ணகி நகரில் கபடி மைதானம்-உதயநிதி ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு

சென்னை கண்ணகி நகர் கார்த்திகா கபடி போட்டியில் இந்தியா தங்கம் வெல்ல காரணமாக இருந்தார். அவரை பாராட்டி அரசு 25 லட்சம் பரிசு தொகை தந்தது. அரசு மட்டுமின்றி நிறைய பேர் உதவிகளை செய்துள்ளார்கள். கார்த்திகா விளையாட்டு வீராங்கனையாக மட்டுமின்றி, தனது மக்களின் சார்பாக அரசியலையும் பேசியிருந்தார். இந்நிலையில் கண்ணகி நகரில் மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

அதேபோல் கண்ணகி நகரிலேயே அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட, சிறந்த கபடி மைதானத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கபடி வீரர், வீராங்கனைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கண்ணகி நகரில் தமிழக அரசின் சார்பில் கபடி மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட் பதிவில், “கபடி வீராங்கனை கார்த்திகாவின் அபார சாதனையால் தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது. கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.

மழை, வெயில் குறித்து கவலையின்றி கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற இந்த உள்ளரங்க மைதானம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். கார்த்திகா போன்ற இன்னும் பல வீராங்கனைகளை நிச்சயம் உருவாக்கும்” என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button