தமிழக ஆளுநரை சந்தித்த த.வெ.க தலைவர் விஜய் ..

தமிழக ஆளுநர் ஆர். என் ரவியை இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்தார். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தோம்.
மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும். அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து உள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார். அவருக்கு எங்களின் நன்றி, என்று அறிக்கையில் கூறி உள்ளனர்.மேலும் அண்ணா பல்கலைகழகம் வன்கொடுமை தொடர்பாக மட்டும் அல்லாமல் பிற விவகாரங்கள் குறித்தும் ஆளுநர் R.N ரவியிடம் த.வெ.க தலைவர் விஜய் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை,பெண்களின் பாதுகாப்பு,போதைப்பொருள் விற்பனை, பெஞ்சல் புயலுக்கான நிவாரண தொகை குறித்து புகார் அளித்திருப்பதாகவும் அவற்றை பரிசீலிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார்.
