மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா..

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்றது. மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியை சுமார் 47,204 ரசிகர்கள் மைதானத்தில் கண்டு களித்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய 3-0 ஓடிஐ தொடர் தோல்விய நிலையில், தற்போது பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வீத்தியுள்ளது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிச்சா கோஷ் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் ஆட்டம் இந்தியாவின் பேட்டிங் திறனை வெளிப்படுத்தியது. கோஷ் 21 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து, சாதனை படைக்க, அதேசமயம், துணை கேப்டன் மந்தனா 47 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து தொடர்ச்சியாக மூன்றாவது அரைசதத்தை அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக அரைசதம் அடித்து மந்தனா சாதனை படைத்தார்.ஸ்மிருதி மந்தனா இந்த ஆண்டு டி20ஐயில் அதிக ரன்கள் எடுத்த வீரரானார்.
