தமிழகம்
சாதி படுகொலைகள் மனதை காயப்படுத்தும்: முதலமைச்சர் ஸ்டாலின்..

தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவ படுகொலைகள் மனதை காயப்படுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வேதனை தெரிவித்துள்ளார். ஒருவர் இன்னொருவரை கொல்வதை எக்காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது என்ற அவர் தமிழ் மண்ணில் ஒற்றுமை உணர்வு ஒலிக்க வேண்டும் என கூறி இருக்கிறார். மேலும் உலகம் முழுக்க பெருமிதத்தோடு வாழும் தமிழ் சமூகம் உள்ளூரில் சண்டையிட்டு கொள்ளலாமா எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.




