தமிழகம்

தமிழகம் முழுவதும் 8,997 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவு..

தமிழ்நாடு முழுக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு இலவசமாகச் சத்துணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுக்க 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அதை நிரப்ப இப்போது சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.சத்துணவுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திடச் சமையல் உதவியாளர்களை பணிக்கு எடுக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுக்க 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அந்த பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.3,000 என்ற தொகுப்பூதியத்தில் இந்த காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் நியமனம் செய்யப்படுவோர் 12 மாதங்கள் திருப்திகரமாக பணியாற்றினால் பணியை முடிக்கும் தகுதியானவர்களுக்குச் சிறப்பு காலமுறை ஊதியமும் தனியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் சிறப்புக் கால முறை ஊதிய (STS) நிலை -1 (ரூ.3000-9000)) வழங்கப்படும்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி /தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button