Uncategorized
சாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார்ஸில் முக்கிய பதவி..!

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர் சாந்தனு நாயுடுவுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக டாடா குழுமம் செயல்பட்டு வருகிறது. இதன் முக்கியமான நிறுவனம் தான் டாடா மோட்டார்ஸ். இந்த நிறுவனத்தின் Strategic Initiatives பிரிவுக்கான பொது மேலாளராக சாந்தனு நாயுடுவுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. சாந்தனு நாயுடுவே இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தன்னுடைய வித்தியாசமான அணுகுமுறைகளால் ரத்தன் டாடாவால் ஈர்க்கப்பட்டு அவருக்கு நெருக்கமானவராக மாறினார் சாந்தனு நாயுடு. குறிப்பாக செல்ல பிராணிகள் மீது அன்பு இருவரையும் ஒன்று சேர்த்தது என்று கூடகூறலாம். இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சாந்தனுவுக்கு பொது மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.